கோவை, திருப்பூர் மாவட்டங்களை ரயில்வே துறை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது - கோவை ரயில் நிலையம் முன்பு பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: காசி தமிழ் சங்கமத்திற்கு இலவச ரயில் சேவை வழங்கும் மத்திய அரசு, இங்குள்ள மாவட்டங்களை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி கோவையில் பல்வேறு கட்சிகள் சார்பில் கோவை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, காங்கிரஸ், எஸ்.டிபி.ஐ, விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மே17 இயக்கம், தமிழ்நாடு வணிகர் பேரவை, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்திய ரயில்வே துறையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், இந்திய ரயில்வே துறை மோடி ஆட்சியில் தமிழகத்தை முற்றிலுமாக புறக்கணித்து வருகிறது.



குறிப்பாக, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல ரயில் சேவை தேவை என்ற நீண்ட நாள் கோரிக்கையை பல ஆண்டுகளாக ரயில்வே துறை புறக்கணித்து வருகிறது.

மேலும், இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அந்த ரயில் சேவைகளையும் மீண்டும் துவக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.



மேலும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும், மேட்டுப்பாளையம் முதல் பொள்ளாச்சிக்கு மெமோ ரயில் இயக்குவது, அனைத்து ரயில்களையும் சிங்காநல்லூர் இருகூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தி செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...