கோவை செஞ்சேரி மலையில் வரும் டிச.14ல் தென்னை உழவர்கள் மாநாடு - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு

கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை ரூ.150ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 14ஆம் தேதி கோவை செஞ்சேரி மலையில் தென்னை உழவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.



கோவை: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக வருகிற 14ஆம் தேதி கோவை மாவட்டம் செஞ்சேரி மலையில் தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருப்பூர் அகத்தியன் வீதியில் உள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் முருகசாமி செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது, மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை 105.90 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

கொப்பரை கொள்முதல் ஏக்கர் ஒன்றுக்கு 285 கிலோவில் இருந்து 500 கிலோவாக உயர்த்த வேண்டும். கேரளாவை போல தமிழ்நாடு அரசு உழவர்களிடம் நேரடியாக உரித்த தேங்காயை டன் ஒன்றிற்கு 40,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தென்னை உழவர்களின் பல்வேறு கோரிக்கைகள் இந்த மாநாட்டில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...