வார்டு எண் 86: புல்லுக்காடு பகுதியில் புனரமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை திறந்து வைத்த மேயர் கல்பனா

கோவை தெற்கு 86வது வார்டுக்கு உட்பட்ட உக்கடம்‌ புல்லுக்காடு பகுதியில்‌ புனரமைக்கப்பட்ட நாய்கள்‌ கருத்தடை மையத்தை மேயர்‌ கல்பனா ஆனந்தக்குமார்‌ குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்‌.



கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌ 86-க்கு உட்பட்ட உக்கடம்,‌ புல்லுக்காடு பகுதியில்‌ இருந்த நாய்கள் கருத்தடை மையம் அண்மையில் புனரமைக்கப்பட்டது.



இந்நிலையில் புனரமைக்கப்பட்ட இந்த மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், இதில் கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தக்குமார்‌ கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்‌.



இதனையடுத்து, சாலை மற்றும்‌ தெருக்களில்‌ பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்‌ ஆதரவற்ற கால்நடைகளை பிடிப்பதற்காக புதிய வாகனத்தையும் மேயர் கல்பனா கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.



கோவை மாநகராட்சியில்‌ பிராணிமித்திரன்‌ மற்றும்‌ எச்‌.ஏ.எஸ்‌ தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்‌ சீரநாய்க்கன் பாளையம்‌, ஒண்டிப்புதார்‌ ஆகிய இடங்களில்‌ செயல்பட்டு வரும்‌ நாய்கள்‌ கருத்தடை மையங்கள்‌ மூலம்‌ கடந்த மார்ச்‌ மாதம்‌ முதல்‌ நவம்பர் மாதம்‌ வரை சுமார்‌ 2300 ஆதரவற்ற நாய்களை பிடித்து சட்டப்படி கருத்தடை செய்துள்ளனர்‌.

இவர்களுக்கு ஆகஸ்ட்‌ மாதம்‌ வரை ரூ.445 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. செப்டம்பர்‌ மாதம்‌ முதல்‌ ரூ.700 ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.



தற்போது சாலை மற்றும்‌ தெருக்களில்‌ போக்குவரத்திற்கும்‌ பொதுமக்களுக்கும்‌ இடையூறு ஏற்படுத்தும்‌ கால்நடைகளை பிடிப்பதற்கும்‌ வாகனம்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்த வாகனம்‌ ஆதரவற்ற கால்நடைகளை பிடித்து பாதுகாப்பாக கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது‌.



இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர் ரா.வெற்றிசெல்வன்‌‌, துணை ஆணையர் மரு.மோ.ஷர்மிளா‌, சுகாதாரக்‌ குழுத்தலைவா்‌ மாரிச்செல்வன்‌, மாமன்ற உறுப்பினர்‌ அகமது ஹபீ்‌, உதவி நகர்நல அலுவலா்‌ வசந்த்‌ திவாகர்‌, கால்நடை மருத்துவர்‌ செந்தில்நாதன்‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர்‌ ராமு, பிராணி மித்திரன்‌ தொண்டு நிறுவனத்தினர்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...