கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு எதிராக மாநகராட்சி ஊழியர்கள் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் உடலில் பிளாஸ்டிக் பைகளை கட்டிக்கொண்டு, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு எதிராக நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில், மாநகராட்சி ஊழியர்கள் உடல் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை கட்டிக் கொண்டு, பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு எதிராக நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யவும் தமிழக அரசு தடை செய்துள்ளது.



அதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி சார்பில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி பணியாளர்கள் உடல் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை கட்டிக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அரசு எடுக்கும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



அதேபோல் தமிழக அரசின் பிரச்சாரமான ”மீண்டும் மஞ்சப்பை” என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...