கோவை ஈச்சனாரி அருகே பதுக்கி வைத்திருந்த 3.6 டன் ரேசன் அரிசி பறிமுதல்….!

நேற்று இரவு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது, ஈச்சனாரி விநாயகர் கோவில் பின்புறம் இருந்த திறந்த வெளியில் இருந்த அறையில் 3 6 டன் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.



கோவை: கோவையில் இருந்து ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதனை கேரளாவிற்கு அதிக லாபத்தில் விற்பனை செய்யும் சட்டவிரோதமான செயலை தடுக்கும் பொருட்டு, மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை ஈச்சனாரி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நேற்று இரவு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஈச்சனாரி விநாயகர் கோவில் பின்புறம் இருந்த திறந்த வெளியில் இருந்த அறையில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அவற்றை சோதனை செய்த போது, அவை அனைத்தும் ரேசன் அரிசி என்று தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 3.6 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அரிசியை பதுக்கியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...