கோவையில் போட்டோ ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை

பீளமேடு அருகேயுள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை.


கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் அபுமோகராஜ் (34). இவர் கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் இளங்கோ நகரில் போட்டோ ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த பணியின் காரணமாக அவர் ஆனைகட்டி சென்றதாக தெரிகிறது. இதனால் ஸ்டூடியோவில் வேலை செய்து வரும் ஸ்டிபன்ராஜ், கடையை கவனித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று வழக்கம் போல ஸ்டிபன்ராஜ் ஸ்டூடியோவில் வேலைகளை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை ஸ்டுடியோவை திறப்பதற்காக சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் உள்பட பல்வேறு பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அபுமோகராஜூக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனே கோவை திரும்பினார்.

பின்னர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன், அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து அபுமோகராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும், அந்த போட்டோ ஸ்டுடியோ அருகே சுற்றித்திரிந்த கார்கள் குறித்தும் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...