கோவை தொண்டாமுத்தூரில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - 120 குடும்பத்தினர் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைப்பு

தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக அட்டுக்கல் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


கோவை: தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் அட்டுக்கல் பகுதியில் மலையில் இருந்து வடியும் நீர் வெள்ளப்பெருக்காக மாறி அப்பகுதியில் உள்ள புத்தூர், புது காலனி குடியிருப்புக்குள் நீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



மேலும், அடுத்தடுத்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அங்கிருந்த சுமார் 120 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அங்கு அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் வெள்ள நீர் புகுந்த குடியிருப்புக்குள் இருக்கும் மழை நீரை, தொண்டாமுத்தூர் பேரூராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் மற்றும் லாரிகள் மூலம் அகற்றி வருகின்றனர்.



மேலும் சேரும், சகதியுமாக உள்ள பகுதிகளை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...