கருஞ்சிறுத்தையை புகைப்படம் எடுத்த கோவையை சேர்ந்த புகைப்பட கலைஞருக்கு குவியும் பாராட்டு

கோவையை சேர்ந்த வன உயிரின புகைப்பட கலைஞர் ஜெயராஜ் கோவிந்தராஜூலு, அரிதாக கருதப்படும் கருஞ்சிறுத்தையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், வன உயிரின புகைப்பட ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



கோவை: கோவை தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் கோவிந்தராஜூலு. வணிக தொழிலில் ஈடுபட்டுள்ள இவர், வன உயிரின புகைப்படங்கள் (Wildlife Photography) எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராவார்.



இதன் காரணமாக கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு படங்களை எடுத்து வருகிறார். சமீபத்தில் வட இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது மிகவும் அரிதாக கருதப்படும் கருஞ்சிறுத்தையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 6 ஆண்டுகளாக வன உயிரின புகைப்படங்களை எடுத்து வருகிறேன். கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வர்ணம் பூசப்பட்ட நாரை (பெய்ட்டட் ஸ்டார்க்) திக்கெல் நீல ஈப்பிடிப்பான் உள்ளிட்ட பல வன உயிரினங்களின் புகைப்படங்களை எடுத்துள்ளேன்.



சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் பென்ச் புலிகள் சரணாலய பகுதிக்கு சுற்றுலா சென்றோம். அங்கு மிகவும் அரிதாக பார்வைக்கு தட்டுப்படும் கருஞ்சிறுத்தை ஒன்றை கண்டோம். உடனடியாக எனது கேமராவில் அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தேன்.



சில நொடிகள் மட்டுமே காண கிடைத்தாலும் அதை மிக அருகில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளத்தில் பகிர்ந்த போது வன உயிரின புகைப்பட ஆர்வலர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...