கோவையில் விமானப்படை மருத்துவமனையை விமானப்படை தலைமை பயிற்சி கட்டளை அதிகாரி திறந்து வைத்தார்

கோவை வந்துள்ள விமானப்படை பயிற்சி கட்டளை அதிகாரி, மன்வேந்திர சிங், ரெட் பீல்டு சாலையில் உள்ள விமான படை கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், விமானப்படை மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.



கோவை: கோவை வந்துள்ள இந்திய விமானப்படையின் பயிற்சி கட்டளை அதிகாரி ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் ரேஸ்கோர்ஸ் பகுதி ரெட் பீல்டு சாலையில் உள்ள விமான படை கல்லூரியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



அவரது வருகையை ஒட்டி, விமானப்படை கல்லூரியில் ஏர் கமாண்டர் ராம்கிஷோர் முன்னிலையில் விமானப்படை போர் வீரர்கள் மரியாதை அளித்தனர்.



விமானப்படை பயிற்சி கட்டளை அதிகாரி, மன்வேந்திர சிங் கல்லூரியின் தற்போதைய பயிற்சி குறித்தும் பராமரிப்பு மற்றும் நிர்வாக அம்சங்களையும் மதிப்பாய்வு செய்தார்.



பின்னர், விமானப்படை மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து அங்குள்ள அம்சங்கள் புதிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.



இந்நிகழ்வில், சிறப்புரை ஆற்றிய விமானப்படை பயிற்சி கட்டளை அதிகாரி, மன்வேந்திர சிங், பயிற்சியில் சிறந்து விளங்குவதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளும் அனைவருக்கும் அவரது பாராட்டுக்களை தெரிவித்தார்.

மேலும், IAF இன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான சிறந்த உழைப்பை தொடர்ந்து வெளிப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...