சென்னையில் குண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் - கோவையை சேர்ந்த நபர் கைது..!

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொப்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த பீர்முகமது என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் மதுக்கடையில் இலவசமாக மதுபாட்டில் தராததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.


கோவை: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், சென்னையில் குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அழைப்பு விடுத்த நபரின் எண்ணை ஆய்வு செய்த போது, கோவையில் இருந்து அழைக்கப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த பீர்முகமது என்பது தெரியவந்தது.

இதையடுத்து கோவை குனியமுத்தூர் போலீஸார் பீர்முகமதுவை கைது செய்து நடத்திய விசாரணையில் இவர் வழக்கமாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே டாஸ்மாக் கடையில் இலவசமாக மது பாட்டில் கொடுக்காத கோபத்தில் தான் வெடி குண்டு வைத்தாக மிரட்டல் விடுத்ததாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...