கோவை நரசிபுரம் அருகே விவசாய தோட்டங்களில் உலா வரும் காட்டு யானை - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!

தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் அருகே விவசாய நிலங்களில் உலா வரும் காட்டு யானைகள், பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில், அப்பகுதியில் யானைகள் உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே நரசிபுரம் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் கூட்டம் இரவு நேரங்களில் உலா வருகிறது.

அவ்வாறு உலா வரும் காட்டு யானைகள், சில நேரங்களில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இதன் காரணமாக அப்பகுதியில், வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து சென்று விவசாய நிலங்களில் உலா வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.



அதே நேரத்தில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் உலா வருவதால், அச்சமடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள் வெளியே வரவே தயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லவும் கூட முடியாத நிலை உள்ளது.



இந்நிலையில் நரசிபுரம் பகுதியில் இரவு நேரங்களில் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே காட்டு யானைகள் உலா வரும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே யானைகள் விவசாய தோட்டங்களுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...