தொடர் விடுமுறையால் உதகைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் - தாவரவியல் பூங்காவை கண்டு ரசிக்க ஆர்வம்

காலாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் என தொடர் விடுமுறை காரணமாக உதகைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகையால், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளன.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக வார நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை என்பது குறைவாக காணப்பட்டாலும் தொடர் விடுமுறை காலங்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் வரத்து காணப்படும்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.



இதனால் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் உதகைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.



அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை தாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க அதிக ஆர்வம் காட்டுவதால் பூங்காவில் இன்று காலை முதலே கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தற்போது குளிர் காலம் என்பதால் பூங்காவில் மலர்கள் இல்லாவிட்டாலும் குளிர்ச்சியான காலநிலையில் பூங்காவை ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.



இதே போல ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...