கோவை வேடப்பட்டி அருகே கோவில் குளக்கரையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு - பரபரப்பு..!

வேடபட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் குளக்கரையில் கேரளாவை சேர்ந்த இளைஞர் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்கொலையா அல்லது வேறு காரணமா என போலீசார் தீவிர விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் அடுத்த வேடப்பட்டி அருகே சிங்காநல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகேயுள்ள குளக்கரையில், இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக வடவள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்த தடயங்களையும் சேகரித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார், நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர், கேரளா மாநிலம் இடிக்கி மறையூரை சேர்ந்த துரைராஜ் மகன் விஷ்ணு (29) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் பீளமேடு பகுதியில் தங்கி சி.என்.சி இயந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், அவர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், கடந்த 11 மாதங்களுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் காதலிக்க வற்புறுத்தி வந்த விஷ்னு, நேற்று வேடப்பட்டியில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு, கடைக்கு தீவைத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் விஷ்னு தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக விஷ்ணு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் குளக்கரையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...