கோவையில் மோப்ப நாய்களுக்கு 6 மாத கால சிறப்பு பயிற்சி - நாமக்கல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது..!

வெடிகுண்டு மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் 6 மாதம் பயிற்சி முடித்த நிலா, டயானா, ஸ்டெஃபி என்ற மூன்று மோப்ப நாய்களும், காவல் ஆணையாளரின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.



கோவை: தமிழ்நாடு காவல்துறை பிரிவில் மோப்ப நாய்களின் பங்கு அளப்பறியது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக குற்ற பின்னணியில் உள்ள நபர்களை கைது செய்ய சின்ன தடயம் கிடைத்தாலும், மோப்ப நாய்களை கொண்டு எளிதில் அவர்களை கண்டுபிடிக்கலாம்.

அதுமட்டுமின்றி வெடிகுண்டு கண்டறிதல், கஞ்சா போன்ற போதை பொருட்களை கண்டறிதல், குற்றவாளிகளை பின் தொடர என மோப்ப நாய்கள் போலீசாருக்கு பெருமளவில் உறுதுணையாக இருந்து வருகிறது.

அவ்வாறான மோப்ப நாய்கள் முறையான பயிற்சி மூலம் செயல்முறைக்காக தயார்படுத்தப்படுகின்றன. இதற்காக, கோவையில் போலீஸ் மோப்பநாய்களுக்கு பயிற்சி அளிக்கும் தனிப்பிரிவு செயல்படுகிறது.

அந்த வகையில், கோவையில் 6 மாதம் பயிற்சி முடித்த 3 மோப்ப நாய்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 3 மோப்ப நாய்களுக்கு 6 மாதங்களாக பயிற்சியானது அளிக்கப்பட்டது.

நிலா, டயானா என்று பெயரிடப்பட்ட இந்த இரு நாய்களுக்கும் வெடிகுண்டு கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஸ்டெபி என்று பெயரிடப்பட்ட மோப்ப நாய் குற்றவாளிகளை கண்டறிவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த மூன்று நாய்களுக்கும் சிறப்பு பயிற்சி நிறைவு பெற்ற நிலையில், அவற்றுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறித்து காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கேட்டறிந்தார்.

இதையடுத்து, ஆணையரின் உத்தரவின்படி நிலா, டயானா மற்றும் ஸ்டெபி நாமக்கல் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...