கோவையில் ஆட்சியர் தலைமையில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் பொதுக்குழு கூட்டம்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் தொடர்ந்து குற்றம் புரிந்தால் கால்நடைகளை பறிமுதல் செய்வது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோயம்புத்தூர் மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கம் பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.



இந்த பொதுக்குழு கூட்டத்தில், கோவையில் உள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் தொடர்ந்து குற்றம் புரிந்தால் கால்நடைகளை பறிமுதல் செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது.



கூடத்தில், வள்ளலார் பல்லுயிர் காப்பக நிதி ஒதுக்கிட்டிலிருந்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு கோருவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கால்நடைகளின் நலன் சார்ந்த செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, செயலாக்கம் செய்ய இக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.



இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் தீபக் ஜேக்கப், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, வனப்பாதுகாவலர் கோசாலா மற்றும் நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள், விலங்கு பிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...