கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கோவை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 32 பயணிகள் காயம்

கோவை நீலாம்பூர் அருகே பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பயணிகள் 32 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு, கோவை வழியாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்றுள்ளது. அந்த பேருந்தில், 37 பயணிகள் மற்றும் ஓட்டுனர், கிளீனர், உதவியாளர் என 40 பேர் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆம்னி பேருந்து கோவை புறவழி சாலையில் நீலம்பூர் அருகேயுள்ள வெங்கடாபுரம் பிரிவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், துரதிஷ்டவசமாக ஆம்னி பேருந்தானது, சாலையோரம் இருந்த சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த பயணிகள், ஓட்டுநர் உட்பட 32 பேர் காயமடைந்தனர்.

இதில், 14 பேர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறிய காயங்கள் அடைந்தவர்கள் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில், சூலூர் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...