பிரதமர் மோடியும், ஜே.பி.நட்டாவும் தமிழ்நாட்டின் மீது சிறப்பு கவனம் செலுத்துகின்றனர் - கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கோவை விமான நிலையத்தில் பேசிய அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை பாஜக தமிழகத்தில் இருந்து தான் துவக்கியுள்ளது என்றும், தமிழகத்தின் மீது பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் நட்டாவும் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.



கோவை: தமிழகத்தின் மீது பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை வழியனுப்ப வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, பேசியதாவது, மேட்டுப்பாளையம் பொதுக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா பேசியது பாஜகவினரிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி வேட்பாளர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் நேற்றைய விழா நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் நட்டா, அன்னூரில் உள்ள இணை தலைவர் வீட்டிற்கு சென்ற பின், இரவு கோவையில் தங்கினார்.

தற்போது இங்கிருந்து ஒடிசா செல்கிறார். எப்போது தேசிய தலைவர் வந்தாலும் தொண்டர்களுக்கு உத்வேகம் தான், தேசிய தலைவர் தமிழகத்திற்கு வருவது புதிது கிடையாது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு வந்து சென்றார். மீண்டும் வந்துள்ளார்.

தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் நட்டாவும் சிறப்பு கவனத்தை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் கூட்டத்தை கூட தமிழகத்தில் இருந்து தான் துவக்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...