கோவை - மேட்டுப்பளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 800 பேர் கைது

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மண்டல தலைமை போக்குவரத்து அலுவலகம் முன்பு ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் உட்பட 800 பேர் கைது.


கோவை: தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், உரிய நேரத்தில் பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மண்டல தலைமை போக்குவரத்து அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் ஓய்வு பெறும் போதே வழங்க வேண்டும், உரிய நேரத்தில் பென்ஷன் வழங்க வேண்டும், நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததன் காரணமாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 800 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...