புத்தாண்டு கொண்டாட்டம்: இரவு 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை - திருப்பூர் மாநகர காவல் ஆணையர்

2022 ஆம் ஆண்டில் கொலை வழக்குகள், கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளை திருப்பூர் மாநகர காவல்துறையினர் சிறப்பாக கையாண்டுள்ளனர் என்று திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரபாகரன் புகழாரம் சூட்டினார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகர் பகுதிகளில் 2022 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரபாகரன் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



மேலும், குண்டர் தடுப்புச் சட்டம், கொலை வழக்குகள், கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை வழிப்பறி வழக்குகள், கஞ்சா விற்பனை குட்கா விற்பனை, லாட்டரி விற்பனை சூதாட்டம், மோட்டார் வாகன சட்டப்பிரிவு என அனைத்து வழக்குகளையும், திருப்பூர் மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக காவல் ஆணையாளர் பெருமிதம் தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருப்பூர் மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு ஒரு மணிக்கு மேல் அனுமதி இல்லை என்றும் புத்தாண்டு இரவில் வாகனங்களை அதிவேகமாக இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்த நடவடிக்கை மூலமாக அதிவேக பயணம் குறைந்து புத்தாண்டு போன்ற நன்னாளில் விபத்துக்களும் தவிர்க்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...