புத்தாண்டே வருக... புதுவாழ்வு தருக... - ஆங்கில புத்தாண்டை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆங்கில புத்தாண்டை வரவேற்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புத்தாண்டை வருக, புதுவாழ்வு தருக, இணையற்ற இளைய ஆற்றல் வெல்க என பதிவிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சென்னை: ஆங்கில புத்தண்டையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் மூலம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக கடந்த 2022ஆம் ஆண்டு அமைந்தது.

உலக அளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன் மிக்கவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023ஆம் ஆண்டில் வீறுநடை போடுவோம்.

புத்தாண்டே வருக.. புதுவாழ்வு தருக...

இணையற்ற இளைய ஆற்றல் வெல்க...

இவ்வாறு தனது வாழ்த்து பதிவில் முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...