மனசாட்சி என்ற காவலருக்கு பொதுமக்கள் பயந்து நடந்தால் எந்த குற்றச்செயலும் நடக்காது - திருப்பூர் மாவட்ட காவல்துறை

திருப்பூர் பல்லடத்தில் காவல்துறை சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய போலீசார், பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்துறையினர் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சஷாங் சாய், பல்லடம் டி.எஸ்.பி செளமியா, ஏ.டி.எஸ்.பி மற்றும் பல்லடம், அவினாசிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.



மேலும் பல்லடம் காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர்கள், போக்குவரத்து போலீசாரும் இந்த நிகழ்வில் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.



பல்லடம் பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள், வான வேடிக்கைகள் வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.



மேலும் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு காவல் துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



அப்போது பேசிய காவலர் ஒருவர், மனசாட்சி என்ற காவலருக்கு பொதுமக்கள் பயந்து நடந்தால் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள் என ஆலோசனை வழங்கியது அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...