போக்ஸோ வழக்கில் சாட்சியளித்த சிறுமியின் பெற்றோர் மீது தாக்குதல் - தந்தை, மகன் கைது

கோவையில் போக்ஸோ வழக்கில் சாட்சியளித்த சிறுமியின் பெற்றோரை தாக்கிய தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கரடிமடையை சேர்ந்த 20 வயது இளைஞர் ராகவேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவையில் உள்ள போக்ஸோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது ராகவேந்திரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, சிறுமியின் பெற்றோர் ராகவேந்திரனுக்கு எதிராக சாட்சியளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராகவேந்திரன் மற்றும் அவரது தந்தை ரங்கராஜன் சிறுமியின் வீட்டுற்கு சென்று அவரது பெற்றோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையேடுத்து, ராகவேந்திரன், அவரது தந்தை ரங்கராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...