கோவையில் கொடூரமாக தாக்கி 2 மாத நாய்க்குட்டி கொலை - போதை ஆசாமி கைது

கோவை வடவள்ளி சோமையம்பாளையத்தில் குடிபோதையில் 2 மாத நாய் குட்டியை அடித்துக் கொலை செய்த செந்தில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை வடவள்ளி சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (26), தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், 2 மாத நாய்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே செந்தில்(30) என்பவர் வசித்து வருகிறார்.



இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக குடிபோதையில் வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்த செந்தில், தெருவில் நின்றிருந்த சிவக்குமாரின் வளர்ப்பு நாய்குட்டியை கற்கள் மற்றும் கம்பால் கொடூரமாக தாக்கி கொன்றுள்ளார்.

இதை தட்டிக்கேட்ட சிவக்குமாரையும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிவக்குமார் அளித்த புகாரின்பேரில் வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 2 மாத நாய்குட்டியை கொடூரமாக தாக்கி செந்தில் கொல்லும் சிசிடிவி காட்சிகள், சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நமது சிம்ளிசிட்டி இணையதள பக்கத்திலும் செய்தி வெளியானது. இந்த செய்தியின் எதிரொலியாக, நாய்குட்டியை அடித்துக் கொன்ற செந்திலை வடவள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...