கோவை பன்னிமடை அருகே அரசு தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாயம்- பொதுமக்கள் அச்சம்

கோவை பன்னிமடை அருகே செல்வ விநாயகர் நகரில் அரசு தொகுப்பு வீடுகளின் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட செல்வ விநாயகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. இதில் கடந்த 1990களில் சுமார் 30 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.



முறையான பராமரிப்பு இல்லாததால், தொகுப்பு வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து வருகிறது. தற்போது வீட்டின் மேற்கூரை அவ்வப்போது பெயர்ந்து விழுந்து வருகிறது.



வீடுகளை சீரமைத்துக் கொடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.



இந்நிலையில், நேற்று ஒரு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் அந்த வீட்டில் இருந்த ஒரு பெண் லேசான காயங்களுடன் தப்பியுள்ளார்.



இந்த அரசு தொகுப்பு வீடுகளை இடித்து, விரைவில் புதியதாக கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...