திருப்பூர் பல்லடத்தில் உயிருடன் காதலியை எரித்த இளைஞர் கைது

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட காதலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், காதலனை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பனப்பாளையம் அருகே பூஜா (19) என்ற இளம்பெண் தலையில் காயங்களுடன் உடலில் உடையில்லாமல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் மாலை சாலையோரம் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன் லோகேஷ் தலையில் தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.



இதே வேளையில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லை என சிகிச்சையில் இருந்த லோகேஷ், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பூஜா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார்.



அதனை தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றிய பல்லடம் போலீசார் நேற்றிரவு காதலன் லோகேஷை கைது செய்தனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...