நீலகிரியில் 1,338 பயனாளிகளுக்கு ரூ.27.67 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நீலகிரி மாவட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் 1,338 பயனாளிகளுக்கு ரூ.27.67 இலட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கபட்டன.



நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் 739 பயனாளிகளுக்கு ரூ.12 இலட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களையும், 599 பயனாளிகளுக்கு ரூ.15.64 இலட்சம் மதிப்பில் கல்வி, திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம் உதவித்தொகை என மொத்தம் 1,338 பயனாளிகளுக்கு ரூ.27.67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.



பின்னர் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,

தொழிலாளர் துறையின் கீழ் 18 தொழிலாளர் நலவாரியங்கள் செயலபட்டு வருகின்றன. அனைத்து மக்களுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.

பெண் ஆட்டோ தொழிலாளர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 இலட்சம் மானியம் வழங்க வழிவகையும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகையும், திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, பதிவு பெற்ற தொழிலாளி இயற்கை மரணம் அடைந்தால் இயற்கை மரண நிதி உதவி,

பதவி பெற்ற தொழிலாளி விபத்தின் காரணமாக விபத்து ஊனம் ஏற்பட்டால் அதற்கான உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகை, 60 வயது நிறைவுபெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒய்வூதியம், விபத்து ஏற்பட்டு விபத்து ஊனம் ஏற்படும் நிகழ்வுகளில் முடக்கு ஒய்வுதியம் ஆகியவைகள் முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அம்ரித், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் தலைவர் பொன்குமார், தொழிலாளர் இணை ஆணையர் (ஈரோடு) சசிகலா, உதகை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாயன் (எ) மாதன், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெனின் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...