திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்காக மாரத்தான்!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்கு நிதி திரட்டும் வகையில், திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே திருப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசுடன் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்துள்ளன.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் தொண்டு நிறுவனங்கள் இணைந்து புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு நிதி திரட்டும் வகையில் திருப்பூரில் மாரத்தான் போட்டியை இன்று நடத்தியது.



திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



திருப்பூர் சிக்கன்னா கல்லூரியில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டி கணியம்பூண்டி வரை சென்று மீண்டும் சிக்கன அரசு கலைக் கல்லூரியில் முடிவடைந்தது. இந்த மாரத்தான் 21, 10 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளாகவும், 5 கிலோமீட்டர் வாக்கத்தான் போட்டியும் நடைபெற்றது.



சுமார் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...