கிராம பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பதிவு செய்யப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு




வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விடுபடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என கிராமப் பகுதிகளுக்குச் சென்று நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், செட்டிபாளையம் ஊராட்சியில் இன்று (11.02.2017) வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள், சோளம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பார்வையிட்டதுடன் அப்பகுதி விவசாயிகளிடம் தங்கள் பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதன் விபரங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டதை அலுவலர்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். தற்பொழுதே அதில் பெயர் திருத்தம், மற்ற பதிவுகள் விடுப்பட்டிருந்தால் அதை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். பண ஒதுக்கீடு வந்த பின்னர் பெயர் மாற்றமோ, மற்ற பெயர் சேர்த்தல் விபரங்கள் விடுதலோ இருந்தால் சரி செய்ய இயலாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவணம் மற்றும் வைக்கோல் வழங்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. விரைவில் தீவனங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து ஓராட்டுக்குப்பை ஊராட்சி, கிணத்துக்கடவு வட்டம் அரசம்பாளையம் ஊராட்சி, பானப்பட்டி ஊராட்சி, அக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி பகுதிகளுக்குச் சென்று வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டதுடன் விவசாயிகளிடம் பதிவு செய்யப்பட்ட விவரம் குறித்து கேட்டறிந்ததுடன் இதேபோல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கண்கெடுக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து பதிவு செய்து கொள்ள விவசாயிகள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்தார். 

இந்த ஆய்வின்போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் (பொ) சுரேஷ், மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டன். 

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...