விவசாயத் தோட்டத்தில் உலா வரும் ஒற்றைக் காட்டுயானை - கோவையில் விவசாயிகள் கலக்கம்!

கோவை வாளையாறு எல்லையில் உலா வரும் ஒற்றைக் காட்டுயானை, மாவூத்தம்பதி கிராமத்தில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வாளையாறு எல்லையில் உள்ள மாவூத்தம்பதி ஊராட்சி முருகன்பதி கிராமத்தில், தர்மராஜ் என்ற விவசாயி தமது தோட்டத்தில் தென்னை, வாழை, சோலம் ஆகியவற்றை பயிரிட்டுள்ளார்.



இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அருகே உள்ள மலையை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து இறங்கும் ஒற்றை காட்டு யானை, தர்மராஜின் தோட்டத்தில் புகுந்து, அரை ஏக்கரில் பயிரிட்டிருந்த சோளப்பயிர்களை முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, அங்குள்ள சுமார் 3 வயதுடைய தென்னங்கன்றுகளை சேதப்படுத்தி குறுத்துகளையும் பிடிங்கியுள்ளது.

பேட்டரி மின்வேலிகள் அமைத்திருந்தாலும், இந்த ஒற்றை யானையானது, அருகே உள்ள மரங்களை தூக்கி வேலிகள் மீது வீசி உடைத்துவிட்டு உள்ளே செல்கிறது. வனப்பகுதிக்குள் விரட்ட முயல்பவர்களையும் , யானை தாக்க முயல்வதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.



மேலும், காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதத்தால் ஏற்படும் நஷ்டத்தையும் தாண்டி, அதனை சீர்செய்யவும் கூடுதல் செலவு ஆவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் நுழைவதைத் தடுக்க வனத்துறை நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...