கோவையில் நோ பார்க்கிங்கில் நின்ற வாகனங்களுக்கு பூட்டு, ரூ.500 அபராதம் - போக்குவரத்து போலீசார் அதிரடி!

கோவை ரயில் நிலைய சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக, நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 கார்கள் மற்றும் 10 இருசக்கர வாகனங்களுக்கு பூட்டு போட்ட போக்குவரத்து போலீசார், ரூ.500 அபராதமும் விதித்தனர்.


கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் தினம் தினம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முக்கிய சாலைகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இதனை தடுக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறை மூலம் முக்கிய சாலைகளில் நோ பார்க்கிங் போர்டுகள் வைக்கப்படுவது மட்டுமல்லாது, டிராபிக்கை கட்டுப்படுத்தும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் இன்று கோவை ரயில் நிலைய சாலையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 கார்கள் மற்றும் 10 இருசக்கர வாகனங்களின் பின் பக்க சக்கரத்தில் இரும்பினால் ஆன காப்பை பூட்டி வைத்தனர்.



இதையடுத்து போக்குவரத்து போலீசார், அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதமும் விதித்தனர். மேலும் இதுபோன்ற நோ பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று பொதுமக்களுக்கு எச்சரித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...