கோவை அருகே செல்போன் பறித்த 3 இளைஞர்கள் கைது!

கோவை மாவட்டம் ராமச்சியம்பாளையம் அருகே வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன் மற்றும் இ-பைக்கை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை சோமனூர் ராமச்சியம்பாளையம் அருகே நேற்றிரவு 10 மணியளவில் வட மாநில தொழிலாளர்களான சுரேந்திரா தனது நண்பர்களுடன் கடைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்தனர். பின்னர் அவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன்களை பறித்துச் சென்றனர்.

இதேபோல் சோமனூர் கடைவீதியில் சூலூர் செந்தேவி பாளையத்தைச் சேர்ந்த சதீஸ் என்பவர் இ-பைக்கையும் நிறுத்தி விட்டு கடைக்குச் சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் அவரது பைக்கையும் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருவாரூரைச் சேர்ந்த ஆகாஷ்(23), விருதுநகரைச் சேர்ந்த தமிழ்வாணன் (32) மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த குணசேகர் (34). ஆகிய மூன்று பேரும் வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...