கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கும்பல் கைது - தனிப்படைப் போலீசார் அதிரடி!

கோவையில் கருமத்தம்பட்டி அருகே பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் 3 பேர் சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது.


கோவை: கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த மர்ம கும்பல் அங்குள்ள வீடுகளை நோட்டமிடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, சங்கோதிபாளையம், செல்லப்பம்பாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள், தோட்டங்களுக்குள் தனியே இருக்கும் வீடுகளில் திருட முயற்சித்துள்ளனர். வீட்டின் கூறையின்மீது ஏறி ஓட்டை பிரித்து உள்ளே இறங்கவும் முயற்சித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, அங்குள்ள வட மாநில நபரிடம் செல்போன்களையும் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக சமூகவலைதளங்களில் வெளியான சிசிடிவி காட்சியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இது குறித்த கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் உதவியோடு தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து, 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

அதன்படி, கைது செய்யப்பட்டவர்கள் ரோஹித் (20), விஜயராஜ் (22), சூர்யா (23) , மேலும் 3 பேர் 18வயது மற்றும் 16 வயதான சிறுவர்கள் எனவும், 6 பேரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த கும்பல் மீது ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் அந்தக் கும்பல் கைதாகியிருப்பது கருமத்தம்பட்டி பகுதி மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...