வாடிவாசல் படத்தின் பெயரில் மோசடி - கோவை இளைஞர்களிடம் பணம் வசூல்!

கோவையில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புத் தருவதாகக் கூறி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் ஒரு கும்பல் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுவருவதாகப் புகார் எழுந்துள்ளது.


கோவை: கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வாடிவாசல் படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விகிரியேஷன் தயாரிப்பில் எடுக்கப்படவுள்ள இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில், கோவையில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு கிராமப்புற தோற்றத்தில் நடிக்க ஆட்கள் தேர்வு நடைபெறுவதாகக் கூறி, நபர் ஒருவருக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுப்பதாக பேசும் இளைஞர் பெயர் தமிழ்ச்செல்வன் என்றும், பதிவுக்கட்டணம் ரூ.2000 ஆயிரத்தை ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிற்கு அனுப்புமாறு அவர் கூறி பண வசூலில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படவாய்ப்பைப் பெற 9345268651 என்ற எண்ணில் உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள் என்ற விளம்பரத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். வாட்ஸ் ஆப்பில் வந்த விளம்பரங்களைப் பார்த்து, கோவை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பலர் இந்த மோசடி கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாந்துவருவதாகத் தெரிகிறது.

இந்த மோசடி தொடர்பாக கோவை மாவட்ட காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, நூதன முறையில் பண வசூலில் ஈடுபட்டுவரும் மோசடி நபர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...