கோவை, திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் - நிரந்தரமாக இயக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை

கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி வழியாகத் திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் பொங்கல் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க கோரிக்கை.


கோவை: பல்லாண்டு கோரிக்கையை ஏற்று கோவையில் இருந்து பழனி வழியாக திண்டுக்கலுக்கு பொங்கல் சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயிலை நிரந்தமாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையிலிருந்து பழனி வழியாகத் திண்டுக்கல்லுக்கு விழாக்கால சிறப்பு ரயில் விட வேண்டும் என பல்வேறு தரப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுத் தென்னக ரயில்வே இன்று முதல் 18ஆம் தேதி வரை கோவை- திண்டுக்கல்- கோவை, பொங்கல் விழாக்கால சிறப்பு ரயிலை இயக்கப்படுகிறது.

இந்த ரயில் காலை 09.20 மணிக்குக் கோவையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்குத் திண்டுக்கல்லைச் சென்றடையும். மறுபடியும் பிற்பகல் 2 மணி திண்டுக்கல்லில் புறப்பட்டு மாலை 5.30 மணிக்குக் கோவையை வந்தடையும். இந்த ரயில் போத்தனூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கடந்த காலங்களில் இந்த ரயில், கோவையில் இருந்து திண்டுக்கல் வரையில் இயக்கப்பட்டு வந்தது. தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் உதவிக்கரமாக இருந்தது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வோர், இந்த ரயிலை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், திடீரென இந்த ரயில் நிறுத்தப்பட்டது. மீண்டும் இந்த ரயிலை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று கோவையில் இருந்து பழனி வழியாக திண்டுக்கலுக்கு பொங்கல் சிறப்பு ரயிலாக விடப்பட்டுள்ளது. இந்த ரயிலைப் பழனியில் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெறும் தை பூச விழா வரைக்கும் இயக்க வேண்டும். இதுமட்டுமன்றி கோவையில் இருந்து திண்டுக்கலுக்கு நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...