சென்னையில் பணிநிரந்தரம் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்களின் போராட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு.



தமிழ்நாட்டில் கொரோனா பேரலையின்போது, அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாகப் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களை தற்போது பணியில் இருந்து விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதை கண்டித்து சென்னை எழும்பூரில் செவிலியர்கள் சார்பில் மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டார்.



அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், கொரோனா காலத்தில் தன் உயிரை துச்சமாக நினைத்து பணியாற்றிய செவிலியர்களை ஆளுகின்ற தமிழக அரசு வஞ்சிக்கிறது. செவிலியர்கள் நடமாடும் தேவதைகள். அவர்களுடைய உழைப்பை இந்த உலகமே கண்டு வியக்கிறது. கொரோனா காலத்தில் செவிலியர்கள் PPE கிட் ஒரு நாள் முழுவதும் அணிந்து சிரமப்பட்டு கோவிட் பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றிய தெய்வங்கள்.

தமிழக அரசு ஊழல் செய்வதற்கும் லஞ்சம் பெறுவதற்கு மட்டும்நிதி இருக்கிறது. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய மட்டும் நிதி இல்லை என்றால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் தமிழக முழுவதும் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

இந்தப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி, 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...