உதகையில் பூச்சி கொல்லி மருந்து (Hit) வெடித்து இருவர் படுகாயம் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!

உதகையில் குளிர் காய்ந்த போது பூச்சி கொல்லி மருந்து டப்பா (Hit) வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பதை பதைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது உறைபனி காலம் என்பதால் மாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை கடுமையான குளிர் நிலவி வருகிறது.

இதனால் மாலை நேரங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி தீ மூட்டி குளிர் காய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் தாவரவியல் பூங்கா அருகே நேற்று முன்தினம் இரவு சிலர் குளிருக்கு தீ மூட்டி குளிர் காய்ந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஒருவர் அட்டை பெட்டிக்குள் எளிதில் தீப்பற்ற கூடிய பூச்சி கொல்லி மருந்து டப்பா (Hit) இருப்பது தெரியாமல் தீயில் போட்டுள்ளார்.

இதனிடையே அட்டைப்பெட்டி நன்றாக எரிந்து கொண்டிருந்த நிலையில், அதில் இருந்த பூச்சிகொல்லி மருந்து டப்பா அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கு குளிர் காய்ந்து கொண்டிருந்த வியாபாரி நந்து மற்றும் சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.



இந்த சம்பவத்தில், சங்கர் லேசான காயத்துடன் அதிஷ்டவசமாக தப்பிய நிலையில் நந்துவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஹிட் டப்பா வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...