கோவை செட்டிப்பாளையத்தில் வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை!

கோவை செட்டிபாளையத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வட மாநில தொழிலாளியை அடித்துக்கொலை செய்த வழக்கில் குன்னூரை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை செட்டிபாளையம் பெரியகுயிழி இடும்பன் கோவில் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக செட்டிபாளையம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த லாலம் கேவத் (37) என்பதும், சூலூர் தென்னம்பாளையம் விஷாகா நகர் பகுதியில் அவர் குடும்பத்துடன் தங்கி, மோல்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

கொலையாளி குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணையில், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த சார்லஸ் (34) என்பவர் உயிரிழந்த லாலம் கேவத் வீட்டின் அருகே வசித்து வந்ததும், கடந்த 8 ஆம் தேதி இருவரும் மது குடிக்க சென்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டு, அதில் ஆத்திரமடைந்த சார்லஸ், லாலம் கேவத்தை அடித்துக் கொலை செய்து விட்டு தலைமறைவானதும் உறுதியானது. இதையடுத்து, சார்லஸை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...