கோவையில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 15ஆவது வார்டில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 15ஆவது வார்டில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சைமுத்து தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 100 பெண்களுக்கு அரிசி, வெல்லம், மஞ்சள், கரும்பு மற்றும் புடவை அடங்கிய பொங்கல் பரிசு பையை அக்கட்சியினர் வழங்கினர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 15ஆவது வார்டில் உள்ள சுப்பிரமணியம் பாளையம் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சைமுத்து தலைமை தாங்கினார்.



இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வண்ணக் கோலமிட்ட பொங்கல் பானை வைத்து தீ மூட்டி, அது பொங்கிவரும் போது குலவையிட்டுப் பொங்கல் வைத்து வழிபட்டனர்.



இதைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 100 பெண்களுக்குப் புடவை, அரிசி, வெள்ளம், மஞ்சள், கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுப் பையினை மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சை முத்து வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் அப்துல்காதர், நிர்வாகிகள் மெளவுனசாமி, சின்ன ராமகிருஷ்ணன், சுரேந்திரபாபு, செந்தில், ரகுபதி, மணி, நடராஜ, சிங்காரம், மேரி, சங்கீதா, சிரவை நடராஜன், காளிச் சாமி, தேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...