கோவையில் சாலை பாதுகாப்பு வார மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர்

சாலை பாதுகாப்பு வாரத்தின் 5வது நாளையொட்டி கோவை மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்து கலந்து கொண்டார்.



கோவை: விபத்துக்களை தவிர்க்கும் விதமாக சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜனவரி 11 முதல் 17 ஆம் தேதி சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



அதன்படி சாலை பாதுகாப்பு வாரத்தின் 5ஆம் நாளான இன்று, கோவை மாநகர காவல் துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.



இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.



கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்து அவரும் பொதுமக்களுடன் இணைந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.



இந்த மாரத்தான் அவிநாசி ரோடு வழியாக வ.உ.சி மைதானம் வரை 5 கிலோமீட்டருக்கு நடைபெற்றது.



இதில் போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன், துணை ஆணையாளர் சிலம்பரசன், உதவி ஆணையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதே போல் உக்கடம் காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று கோவை மாநகர காவல் நிலையங்கள் அனைத்திலும் மாரத்தான் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...