திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பொங்கல் விழா - பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடிய காவலர்கள்

திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து, பொங்கல் பொங்கி வரும் போது, 'பொங்கலோ பொங்கல்' என முழக்கமிட்டு ஆடி பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



திருப்பூர்: தை திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



காவல் ஆய்வாளர் பிச்சையா தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழா நிகழ்வில் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.



காவல் நிலையத்திற்கு முன்பு வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்து, பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வரும் பொழுது குலவை மற்றும் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டும் ஆடிப்பாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



மேலும் இந்த தெற்கு காவல் நிலையம் கடந்த ஆண்டு தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு முதல்வரின் விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...