கோவையில் நடைபெற்ற மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் - இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாட்டம்

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் கோவையில் நடைபெற்ற மதநல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து மதத்தினர் பங்கேற்றது மட்டுமல்லாமல், உலக அமைதி வேண்டி சமாதான புறாக்களை பறக்க விட்டனர்.



கோவை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் கோவையில் மதநல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.



பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக கொண்டாடப்பட்ட இந்த பொங்கல் விழாவில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என பலரும் பங்கேற்று பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி முகமது ரபி ஏற்பாட்டில் கோவை பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இந்த மத நல்லிணக்க பொங்கல் விழாவில், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ பிரதிநிதிகள் மற்றும் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பொங்கல் விழாவில், உலக அமைதி வேண்டி சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்க மூன்று சமாதான புறாவை பறக்க விட்டனர்.



பின்னர் விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்கும், சிறந்த சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் பொங்கல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், சமூக சேவகர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.



தொடர்ந்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக ஏழை, எளிய குடும்ப பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.



பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக மதங்களை கடந்து அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர்.

தமிழர் பண்டிகையான பொங்கல் மதம், மொழி கடந்த ஒரு பண்டிகையாகும். அதனடிப்படையில் இந்த மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளது என்றும். இந்த முன்னெடுப்பு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது எனவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...