கோவை டூ சார்ஜாவுக்கு விமானம் மூலம் 7 டன் கரும்பு, மஞ்சள், வெல்லம் ஏற்றுமதி!

கோவையிலிருந்து பொங்கல் பண்டிகைக்காக சார்ஜாவுக்கு கடந்த 5 நாட்களில் 7 டன் கரும்பு, மஞ்சள், வெல்லம் சார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தை முதல் நாளான்று பொங்கல் பண்டிகை கொண்டாட்டப்பட்டுவருகிறது. பொங்கல், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் வழிபாட்டின் பிரதானப் பொருட்கள். அந்த வகையில், இந்த ஆண்டு, கோவையிலிருந்து சார்ஜாவுக்கு விமானம் மூலம் கரும்பு, வெல்லம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தில் 5 நாட்கள் சார்ஜாவுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 5 நாட்களில் கோவையிலிருநது ஏழு டன் அளவுக்கு, பொங்கல் பண்டிக்கைக்கான கரும்பு, மஞ்சள் வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரும்பு மஞ்சள், வாழை இலை, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு புக்கிங் செய்யப்பட்டு ஷார்ஜா செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த 5 நாட்களில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், 5 டன் கரும்பு மற்றும் 2 டன் வெல்லம், மஞ்சள், வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். இந்த பொருட்கள், மதுரை, தேனி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...