அரசின் தடையை மீறி கோவையில் இறைச்சி விற்பனை - 20 கிலோ இறைச்சி பறிமுதல்!

திருவள்ளுவர் தினமான இன்று அரசின் தடையை மீறி கோவையில் இறைச்சி விற்பனை செய்த 3 கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், 20 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.


கோவை: திருவள்ளுவர் தினமான இன்று இறைச்சிக் கடைகள் இயங்கக் கூடாது என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கோவை மாநகரில் அரசின் தடையை மீறி இறைச்சி மற்றும் மது விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கோவை மாநகர் பகுதியில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் வடவள்ளி, கவுண்டம்பாளையம், பி.என்.புதூர் ஆகிய பகுதிகளில் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.



இதன் அடிப்படையில், அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், மூன்று கடைகளில் இருந்து சுமார் 20 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலா 1000 ரூபாய் அபராதமும் விதித்தனர்.

இதேபோல் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி வள்ளலார் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைகளில் சோதனை மேற்கொண்டு அதிகாரிகள் அபராதம் விதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...