பல்லடம் அருகே 20 நாட்டு மாடுகளுடன் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய விவசாயி!

பல்லடம் அருகே 20-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்குப் பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து அசத்திய விவசாயி ஈஸ்வரன்.


திருப்பூர்: பல்லடம் அருகே 20-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு விவசாயி ஒருவர் பாரம்பரிய முறையில், மாட்டுப்பொங்கல் கொண்டாடியது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த, சின்னக்காளிபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(63). விவசாயியான இவரிடம், 20-க்கும் மேற்பட்ட காங்கேயம் இன நாட்டு மாடுகள் உள்ளன. மாட்டுப் பொங்கல் தினமான இன்று மத்தளங்கள் முழங்க இவரது தோட்டத்தில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இது குறித்து ஈஸ்வரனிடம் கேட்டபோது, 'மாடுகளை பட்டியாபுரம் தாயாக வழிபட்டு வருகிறோம். அன்றாடம் உழவுக்குச் செல்லும் முன் மாடுகளை வழிபட்ட பின் தான் பணிகளை ஆரம்பிப்போம். மாட்டுப் பொங்கல் நாளில், மாடுகளைக் குளிக்க வைத்து, பொட்டு வைத்து, மாலை சூடி அலங்கரிப்போம்.



தொடர்ந்து, சிறியதாக தெப்பக்குளம் கட்டி, அதில் பால், தண்ணீர் ஊற்றி, குளத்தின் மறுபுறம் முடக்கத்தான், ஆத்திமாறு, ஊஞ்சமாறு ஆகியவற்றைக் கயிறாக்கிக் கட்டுவோம். மாட்டுப் பொங்கலான இன்று உழவுக்குப் பயன்படும் அனைத்து உபகரணங்களையும் வைத்து பூஜை செய்வோம்.



மேலும் மாடுகளுக்குப் பொங்கல் படைத்து, கரும்பு, முறுக்கு உள்ளிட்டவற்றை மாட்டின் கொம்புகளில் கட்டுவோம். தெப்பக்குளம் தாண்டி செல்லும் மாடுகள், முடக்கத்தான் கொடியை அறுத்துக்கொண்டு தெப்பக்குளத்தின் மறுபக்கம் செல்ல வேண்டும்.



அவ்வாறு சென்றால் தான் விவசாய நிலத்தின் முடக்கு நீங்கியதாக அர்த்தம். இதையடுத்து, இறைவனை வழிபட்டு அனைவரும் பொங்கல் உண்போம். முப்பாட்டன், பாட்டன், தந்தை என, வழிவழியாக இந்த மாட்டுப் பொங்கல் வழிபாட்டைச் செய்து வருகிறோம், என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...