உதகையில் எமரால்டு அணையிலிருந்து 1500 கிலோ ரேசன் அரிசி மீட்பு

உதகை அருகே எமரால்டு அணைக்குள் 1500 கிலோ ரேசன் அரிசியைச் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி மர்மநபர்கள் வீசிச் சென்றதால் பரபரப்பு.


நீலகிரி: உதகை அருகே எமரால்டு அணைக்குள் 1500கிலோ ரேசன் அரிசியைச் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி வீசிச் சென்ற மர்ம நபர்களை, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கேரள மற்றும் கர்நாடகா மாநிலங்களை ஒட்டி உள்ளது. இதனால் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியைக் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குக் கடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனைக் கண்காணிக்கும் பணியில் நீலகிரி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலையும் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகள் சந்திக்கக்கூடிய சுருக்கி பாலம் என்ற இடத்தில் ரேஷன் அரிசி சிறுசிறு மூட்டைகளாகக் கட்டப்பட்டு அணைக்குள் வீசப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் அணையின் நீரில் தலா 15 கிலோ ரேஷன் அரிசி வீதம் 100 பைகளில் வீசப்பட்டிருந்த அரிசியினை மீட்டனர்.



மேலும் இந்த ரேஷன் அரிசி பைகளை அணைக்குள் வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்தும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...