காட்சிப்பொருளாக நிற்கும் குடிநீர் தொட்டி - உடுமலை தாலுக்கா அலுவலகத்தில் அவலம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தாலுக்கா அலுவலகத்தில் முறையான குடிநீர் வசதி செய்யப்பட்டாமல், அங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டி இதுவரை காட்சிப்பொருளாக மட்டுமே இருந்து வருவது அப்பகுதி மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் கிளைச்சிறை, இ-சேவை மையங்கள், நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.



உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியிலில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி இதுவரை செய்யப்படவில்லை.



இங்கு தாலுக்கா அலுவலக பிரதான நுழைவு வாயில் அருகே ஒரு பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொட்டியிலும் முறையாக தண்ணீர் நிரப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டு, வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.

இதனால், அரசு சார்ந்த பணிகளுக்காக தாகத்துடன் வரும் பொதுமக்கள், தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி, தாலுக்கா அலுவலக வளாகத்தில் தேவையான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித்தர தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...