உடுமலையில் சலகெருது ஆட்டத்தில் வீரர்களை பந்தாடிய காளை - வைரல் வீடியோ!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆல்கொண்ட மால கோயிலில் பாரம்பரிய சலக்கெருது ஆட்டம் நடைபெற்றது. அப்போது, இளங்காளை ஒன்று வீரர்களை விரட்டி விரட்டி பந்தாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


திருப்பூர்: பொங்கல் பண்டிகை வந்துவிட்டால் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் களைகட்டும் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சலக்கெருது (சலங்கை எருது ஆட்டம்) ஆட்டம்.



கால்களில் சலங்கை கட்டிய இளைஞர்கள், கையில் நீண்ட கம்புகளை வைத்து, உருமி இசைக்கேற்ப காளையின் முன்னே நடனமாடி, காளைகளையும் ஆட வைப்பதுதான் சலக்கெருது ஆட்டம். திருப்பூர் மாவட்டத்தின் பல கிராமங்களிலும் பொங்கல் பண்டிகையின் போது இந்த நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டுவருகிறது.

அந்த வகையில், உடுமலை அருகே உள்ள ஆல் கொண்ட மால கோயிலிலும் சலக்கெருது ஆட்டம் நடைபெற்றது.



சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சார்பில் இந்த பாரம்பரிய சலகெருது ஆட்டம் நடத்தப்பட்டது.



அப்போது, சலகெருது ஆட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட இளஞ்காளை ஒன்று, வீரர்கள் மற்றும் கூட்டத்தில் இருந்தவர்களை துரத்தி துரத்தி பந்தாட முயன்றது. இந்தக் காட்சியானது, "கொம்பன்" பட பாடல் பின்னணியுடன் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...