கோவை மாநகராட்சி பணிகளை மேயர் கல்பனா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூர் மார்க்கெட் பகுதியில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்து வரும் பல்வேறு பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.2-க்குட்பட்ட துடியலூர் மார்க்கெட் பகுதியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை (Micro Composting Centre) மேயர் கல்பனா ஆனந்தகுமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து அதேபகுதியில் ரூ.1.83 லட்சம் மதிப்பீட்டில் சிறுநீர் கழிப்பிடத்திற்கான கட்டுமானப்பணியினை மேயர், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் எனப் பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

துடியலூர் பகுதியிலுள்ள நகர்நல மையத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்தும், தாய் சேய் நலம் குறித்தும், மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.



பின்னர், வடக்கு மண்டலம், வார்டு எண். 1-க்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மைய (Micro Composting Centre) கட்டுமானப்பணியினையும், அதே பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நகர்நல மையத்தையும், கலைஞர் நகர்ப் பகுதியில் 200 மீட்டர் தொலைவிற்கு ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகத் தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகச்செய்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, வார்டு எண்.1-க்குட்பட்ட பி.ஆர்.எம் கார்டன் முதல் துடியலூர் சந்திப்புவரை மழைநீர் வடிகால் கட்டுவதற்கு உரியத் திட்ட மதிப்பீடு தயாரித்திடச் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்திய பின்னர், வார்டு எண்.18-க்குட்பட்ட நல்லாம்பாளையம், ஜெயந்தி நகர்ப் பகுதியில் பின்னர், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நகர்நல மைய கட்டுமானப்பணியினை மேயர் கல்பனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து மாணவர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார். இதே போல வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ராமசாமி நகர்ப் பகுதியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினையும் மேயர் ஆய்வு செய்தார்.



இதே போல நல்லாம்பாளையம், ராமசாமி நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப்பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வடக்கு மண்டல வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் புஷ்பமணி, கற்பகம், ராதாகிருஷ்ணன், உதவி ஆணையர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் பௌன்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...