கோவை மலுமிச்சம்பட்டியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மலுமிச்சம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊதுகுழலாகவும், மக்கள் விரோத போக்கை கடைபிடிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களை கிடப்பில் போடுவதாகவும், ஆர்.எஸ் எஸ் அமைப்பின் ஊதுகுழலாகவும், மக்கள் விரோத போக்கை தமிழ்நாடு ஆளுநர் கடைப்பிடித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.



காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மதுக்கரை பாலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காளீஸ்வரன், ஜி.ஏ.கண்ணன், ஆர்.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் அவரை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கு.பே.துரை, புவனேஸ்வரி, நஞ்சப்பன், முருகானந்தம், உதயகுமார் உள்ளிட்ட வட்டார தலைவர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...