உடுமலை கச்சேரி வீதியில் வாகனநெரிசல் - அவசர ஊர்திகள் ஊர்ந்து செல்லும் அவலம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கச்சேரி வீதியில் நாளுக்குநாள் வாகன நெரிசல் அதிகரித்துவருகிறது. இதை சீர்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் நீதிமன்றம், தாலுக்கா அலுவலகம், சார்ப்பதிவாளர் அலுவலகம், வங்கிகள் என முக்கியமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. இதனால், அந்த வீதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும், இப்பகுதியில் அரசு மருத்துவமனையும் உள்ள காரணத்தால், அவசர ஊர்திகளும் இந்தக் கச்சேரி வீதியையே பயன்படுத்தி வருகின்றன.



இந்த நிலையில், கச்சேரி வீதியில் உணவகத்திற்கும் வருபவர்களும், வங்கிகளுக்கு வருபவர்களும் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால், அவசர ஊர்திகள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறையினர், கச்சேரி வீதி பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...